சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் கடந்த சில நாட்களாக கரோனோ பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் செல்லும் பொழுது தவறாமல் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
சென்னையில் முகக்கவசம் அணியாத 2,682 பேரிடம் இருந்து ரூ.13.41லட்சம் அபராதம் வசூல்! - பெருநகர சென்னை மாநகராட்சி
சென்னையில் முகக்கவசம் அணியாத 2,682 நபர்களிடமிருந்து ரூ.13,41 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முகக்கவசம் அணியாத 2,682 நபர்களிடமிருந்து ரூ.13,41லட்சம் அபராதம் வசூல்!
இந்த நிலையில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மாநகராட்சி குழுக்களின் மூலமாக கடந்த 6 ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணியாத 2,682 பேரிடம் இருந்து 13 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:குரூப் 4 தேர்விற்கான ஹால் டிக்கெட் வெளியீடு!