2019 - 2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் சட்டப் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் வறுமையை ஒழிக்க ரூ. 1,150 கோடி: பட்ஜெட்டில் ஓபிஎஸ் தகவல் - budget
சென்னை: தமிழகத்தில் வறுமையை ஒழிக்க ஆயிரத்து 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அப்போது, தமிழகத்தில் வறுமையை ஒழிக்க ஆயிரத்து 150 கோடியே 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு விபத்துக் காப்பீடு, ஆயுள் காப்பீடு உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
2019 - 2020 ஆண்டில் தமிழகத்தின் வருவாய் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 117 கோடி ரூபாயாக கணிக்கப்பட்டுள்ளது என்றுக் கூறிய நிதியமைச்சர், நடப்பாண்டுக்கான வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 315 கோடி ரூபாயாக இருக்கும் என தெரிவித்தார்.