தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கு - ரூ.11 கோடி அபராதம் வசூல்! - குடிபோதை வழக்கு

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 11 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : May 3, 2023, 5:28 PM IST

சென்னைகாவல் துறை, சாலை விபத்தைக் குறைக்கும் வண்ணம் மோட்டர் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று மது போதையில் வாகனம் ஓட்டுவதாகும்.

எனவே, மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதத் தொகை 10 ஆயிரம் ரூபாய் விதிக்கப்படுகிறது. ஆனால், பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. இதில் 8 ஆயிரத்து 206 மதுபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன. எனவே, இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னையில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த ஏப்.29ஆம் தேதியன்று, அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் 698 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக 72 லட்சத்து 30 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்பட்டன. கடந்த இரண்டு மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 10 ஆயிரத்து 832 மது போதை வழக்குகள் தீர்க்கப்பட்டு 11 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

மேலும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்த வாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துகள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணை பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதுபோன்று மதுபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கு 361 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளன என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க:நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் சுவர் இடிந்து விபத்து - முதியவர் படுகாயம்

ABOUT THE AUTHOR

...view details