தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்சி ஸ்டிக்கரில் எம்ஜிஆர், ஜெயலலிதா காணோம்:  திமுகவில் இணைந்த அதிமுகவினர்! - chennai latest news

சென்னை: கட்சி ஸ்டிக்கரில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் அதிருப்தி அடைந்த ராயபுரம் அதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்
திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

By

Published : Mar 31, 2021, 8:26 PM IST

சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ராயபுரம் தொகுதி திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி, "அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியில் அதிமுகவிலிருந்து தொண்டர்களும், நிர்வாகிகளும் தினம் தினம் வந்து திமுகவில் இணைந்து கொள்கின்றனர்.

அதிமுக கட்சி ஸ்டிக்கரில் ஜெயக்குமார் படம் மட்டும் இருந்தது. மறைந்த ஜெயலலிதா எம்ஜிஆர் படங்கள் இல்லாததால் அதிர்ச்சி அடைந்து அதிமுகவிலிருந்து திமுகவில் நிர்வாகிகள் இணைந்தனர்.

திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள்

இது குறித்து அமைச்சரிடம் நிர்வாகிகள் கேட்டபோது அவர்கள் படத்தைப் போட்டு வாக்கு கேட்க எனக்கு அவசியமில்லை என்றும், என் முகத்தைப் பார்த்து தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள் என்று சொன்னதாகவும் நிர்வாகிகள் என்னிடம் கூறினார்கள்.

மேலும் ஜெயக்குமார் 25 ஆண்டுகள் ராயபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தியது இல்லை. உடன் இருந்த கட்சியினருக்கும் எதுவும் செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: இழிவாகப் பேசியதால் திமுகவிலிருந்து விலகினேன் - குஷ்ப

ABOUT THE AUTHOR

...view details