சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் மூன்றாவது நகரில் வசித்து வந்தவர் சந்தோஷ்குமார்(26). அதிமுக மாவட்டச் செயலாளர் தம்பியான இவர், நேற்று காலை வீட்டின் அருகே உள்ள பள்ளியில் தனது மகனை விட்டுவிட்டு வீடுதிரும்பியபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக வெட்டினர்.
அதில் தலை, கழுத்து, கை உள்ளிட்ட பல இடங்களில் அவர் படுகாயமடைந்தார். இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.