வடசென்னை பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பிரசன்னா. கல்வெட்டு ரவியின் கூட்டாளியான இவர் புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதியில் வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
பிரபல ரவுடியின் கூட்டாளி கைது! - புதுவண்ணாரப்பேட்டை , ராயபுரம்
சென்னை: புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடியை காவல் துறையினர் கைது செய்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர் . விசாரணையில், இவர் மீது புதுவண்ணாரப்பேட்டை , ராயபுரம் திருவொற்றியூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. இதனையடுத்து பிரசன்னா மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்
தற்போது பாஜகவில் இணைந்த கல்வெட்டு ரவியின் கூட்டாளிகளை காவல்துறையினர் தனி தனியாக கைது செய்து வருவது வடசென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது