தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரபல பெண் தாதாவுக்கு பாஜகவில் மாவட்ட செயலாளர் பதவி! - பிரபல பெண் தாதாவுக்கு பாஜகவில் பதவி

சென்னை: பிரபல பெண் தாதாவுக்கு பாஜகவில் வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BJP
BJP

By

Published : Nov 21, 2020, 11:04 AM IST

சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த பிரபல பெண் தாதா அஞ்சலை. இவர் மீது போதை பொருள் கடத்தல், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வடசென்னையை கலக்கி வந்த பெண் தாதா அஞ்சலைக்கு, பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், பாஜக தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து அஞ்சலை போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.

ஏற்கெனவே வடசென்னை ரவுடிகள் கல்வெட்டு ரவி, சத்யா, சேலத்தைச் சேர்ந்த ரவுடி முரளி உட்பட பல ரவுடிகளுக்கு பாஜக பதவி வழங்கியிருப்பதால், பாஜக ரவுடிகளின் கூடாரமாக மாறி வருகிறது என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details