சென்னை பாடி கலைவாணர் நகரில் வசித்து வந்த ரவுடி சுரேஷ் (31) கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது தாய் கலாவுடன் புழல் காவாங்கரை பகுதியில் குடியேறினார். அங்கு சென்ற பிறகும், பாடி கலைவாணர் நகரில் ஆட்டோ ஓட்டி வந்த சுரேஷுக்கும் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வரும் ஜெயக்கொடி மனைவி கார்த்திகாவுக்கும் திருமணம் மீறிய உறவு இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி திடீரென சுரேஷ் காணாமல் போனதால் அவரது தாயார் கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கார்த்திகா, ஜெயக்கொடி, அவரது நண்பர்கள் இருவர் ஆகியோர் சுரேஷின் கழுத்தறுத்து கொலை செய்தது தெரியவந்தது.