தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினர் தொல்லை தாங்கல - தற்கொலைக்கு முயன்ற ரவுடி - rowdy suicide attempt

கொடுங்கையூர் அருகே செல்ஃபோன் டவர் மீது ஏறி ரவுடி ஒருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலைக்கு முயன்ற ரவுடி
தற்கொலைக்கு முயன்ற ரவுடி

By

Published : Aug 29, 2021, 7:20 AM IST

சென்னை: கொடுங்கையூர் சேலை வாயில் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (எ) ஓட்டை வடை மணி (29). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயதில் ஆண் குழந்தை இருக்கிறான்.

ஓட்டை வடை மணி மீது கொலை வழக்கு உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தற்போது வழக்குகளில் எதுவும் சிக்காமல் திருந்தி வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் திருந்தி வாழ்ந்தும், தொடர்ந்து காவல் துறையினர் இவருக்கு தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த மணிகண்டன் நேற்று (ஆகஸ்ட் 28) காலை கொடுங்கையூர் சின்னான்டிமடம் அருகேவுள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.

தற்கொலைக்கு முயன்ற ரவுடி

அவரது நண்பர்கள், மனைவி எவ்வளவு கூறியும் கீழே இறங்காததால், கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், அவரிடம் சமாதானம் பேசி பத்திரமாக கீழே இறங்க வைத்தனர். தொடர்ந்து மணிகண்டனை கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details