காவல் துறையினர் காலை ரோந்துப் பணியில் ஈடுபடும்பொழுது சந்தேகத்தின்பேரில் தமிழரசன் என்பவரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், காசிமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி கார்த்திக் என்ற 'குல்ல' கார்த்திக் அவனது கூட்டாளிகளுடன் நேற்றிரவு புதுவண்ணாரப்பேட்டை துறைமுக குடியிருப்பு வளாகத்திலுள்ள காலி மைதானத்தில் ஒருவரை சரமாரியாகக் கத்தியால் வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றதாகக் கூறினார்.
சென்னையில் ரவுடி வெட்டிக் கொலை!
சென்னை: காசிமேடு பகுதியைச் சேர்ந்த ரவுடி நேற்றிரவு வெட்டி கொலை செய்யப்பட்டார்.
வெட்டிக் கொலை
இதனையடுத்து, புதுவண்ணாரப்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உடலைக் கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் அவர் சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சுரேஷ் (எ) டகுல் சுரேஷ் என்பது தெரியவந்தது. தலைமறைவாகவுள்ள 'குல்ல' கார்த்திக்கையும் அவரது கூட்டாளிகளையும் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.