தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு! - rowdy shankar encounter case

சென்னை: அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

ரவுடி சங்கர் எண்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
ரவுடி சங்கர் எண்கவுண்டர் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

By

Published : Sep 1, 2020, 4:15 PM IST

சென்னை அயனாவரத்தில் கடந்த 21ஆம் தேதி ரவுடி சங்கரை காவல் துறையினர் என்கவுண்டர் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் பெருநகர குற்றவியல் ஐந்தாவது நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் கண்ணன் மருத்துவமனைக்கு வந்து இறந்த ரவுடி சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகாவிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது குடும்பத்தினர் காவல் ஆய்வாளர் நடராஜன் மீது மாஜிஸ்திரேட்டிடம் புகார் அளித்தனர். இதையடுத்து மாஜிஸ்திரேட் சிவசக்திவேல் என்கவுண்டர் நடந்த நியூ ஆவடி சாலைக்கு சென்று ஆய்வு செய்தார். அந்த இடத்தில் மூன்று கிலோ கஞ்சா, அரிவாள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டன.

இதனிடையே, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ரவுடி சங்கரின் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரவுடி சங்கரின் உடற்கூராய்வு முடிந்த பிறகு உடலை வாங்க உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. ஏற்கனவே சங்கரின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

இதனால் இரண்டு நாட்களாக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் விதிகளின்படி சுட்டுக்கொன்ற காவல் துறையினரே வழக்கை விசாரிக்க முடியாது. எனவே சிபிசிஐடி விசாரிக்க சென்னை காவல் துறையினர், டிஜிபியிடம் பரிந்துரை செய்திருந்தனர். இந்த நிலையில், இன்று (செப்.1) ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கைது செய்யும்போது காவல் துறையினர் மேற்கொள்ளவேண்டியவை என்ன?' - டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை

ABOUT THE AUTHOR

...view details