சென்னை: வடசென்னையின் பிரபல ரவுடி கல்வெட்டு ரவி சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "திருந்தி நல்ல முறையில் வாழ்ந்து மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க விரும்புகிறேன். என் மீதுள்ள வழக்குகளை ஆஜராகி நீதிமன்றத்தில் விடுதலை பெற்று கொள்கிறேன்.
எனது மகள்களின் எதிர்காலத்திற்காக வாழ விரும்புகிறேன். நான் இனி எந்த குற்றச்செயலிலும் ஈடுபட மாட்டேன் என்று தங்களிடம் உறுதி கூறுகிறேன்.
என் மீது ஏதேனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் தயவு கூர்ந்து என்னை விசாரித்து உண்மை அறிந்து என்னை பொய் வழக்குளில் இருந்து காப்பாற்றும்படி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.