சென்னை தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை பகுதியில் தலைமைக் காவலரிடம், நிலம் வாங்கித்தருவதாகக் கூறி அதே பகுதியைச் சேர்ந்த கஜா என்கிற கஜேந்திரன் (30) என்பவர் 23 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால், அவர் நிலம் வாங்கித் தராமல் ஏமாற்றியதால் காவலர், பீரக்கன்காரணை காவல் துறையினரிடம் புகாரளித்தார் .
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்ததில், பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளி கஜேந்திரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து கஜேந்திரனைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த பீர்க்கன்காரணை காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தனர்.