தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவேற்காட்டில் ரவுடி வெட்டிப் படுகொலை! - ரவுடி வெட்டி படுகொலை

சென்னை: திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி அஜித் குமார் இன்று (செப்.12) படுகொலை செய்யப்பட்டார்.

அஜித்
அஜித்

By

Published : Sep 12, 2020, 10:26 PM IST

திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் பகுதியில் உள்ள முட்புதரில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில் திருவேற்காடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச்சென்று படுகொலை செய்யப்பட்டிருந்த இளைஞரின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து விசாரணையில் படுகொலை செய்யப்பட்டவர், திருவேற்காடு அன்பு நகரைச் சேர்ந்த அஜித் குமார்(23) என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று(செப்.12) காலை மது அருந்துவதற்காக, அஜித் குமார் நண்பர்கள் அவரை அழைத்துச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக? அஜித் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட அஜித் குமார் மீது ஏற்கெனவே கொரட்டூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கும், திருவேற்காடு காவல் நிலைய சரித்திரப் பதிவேடும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details