சென்னை:எண்ணூர் நேதாஜி நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் முன்னாள் ரவுடி ஆறுமுகம் (40). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 12-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பெரும்பாலான வழக்குகள் முடிந்த நிலையில் மனம் திருந்தி ஆட்டோ ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆகாத இவர் தாயுடன் தனியாக வசித்துவந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (செப். 26) இரவு குடிபோதையில் வந்த அடையாளம் தெரியாத ஐந்துநபர்கள் ஆறுமுகம் வீட்டின் முன் ரகளையில் ஈடுபட்டு ஆறுமுகத்தை வெளியே வர அழைத்துள்ளனர். இதனால் பயந்துபோன ஆறுமுகம் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்துள்ளார்.
முன்விரோதம் காரணமாக கொலை
அதற்குள் அந்தக் கும்பல் ஆறுமுகத்தின் வீட்டுக் கதவை உடைத்து, அவரைச் சரமாரியாக வெட்டிக் கொலைசெய்து தப்பி ஓடியது.