தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் ரவுடி போக்சோ சட்டத்தில் கைது! - chennai latest news

சென்னையில் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்து கர்ப்பமாக்கிய ரவுடியை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

போக்சோ சட்டத்தில் கைது
போக்சோ சட்டத்தில் கைது

By

Published : Jul 4, 2021, 6:44 PM IST

சென்னை: காசிமேடு காசிபுரத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் என்ற தேசப்பன் (21). இவர் மீது இரண்டு கொலை வழக்குகள், கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்தப் பகுதியில் தேசப்பன் ரவுடியாகவே வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் ஆண்டுதோறும் சபரிமலைக்கு செல்லும்போது, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஒரு குறிப்பிட்ட கடையில் பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது அந்தக் கடையின் உரிமையாளரின் பேத்தியான 17 வயது சிறுமியுடன் இவருக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் சிறுமியை காதலிப்பதாக கூறிய தேசப்பன், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் சிறுமியை ரகசியமாக சென்னை அழைத்து வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட தேசப்பன்

மேலும் திருமணம் செய்யாமலேயே சிறுமியுடன் குடும்பம் நடத்தி, பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதன் விளைவாக தற்போது சிறுமி 5 மாத கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர், குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் காவல் துறையினரின் உதவியோடு சம்பவ இடத்திற்கு சென்ற குழந்தைகள் நல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் திருமணம் செய்யாமலே சிறுமியுடன், தேசப்பன் குடும்பம் நடத்திவருவது உறுதியானது.

இதற்கு தேசப்பனின் தாய் கீதாவும் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. உடனடியாக தேசப்பனை கைது செய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:முதியவரிடம் ரூ. 3 லட்சம் பறித்த கொள்ளையர்கள்!

ABOUT THE AUTHOR

...view details