சென்னை மாநில கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் சிலர் சேப்பாக்கத்தில் இருந்து கடற்கரை ரயில் நிலையம்வரை செல்லக்கூடிய மின்சார ரயிலில் பயணித்தனர். பின்னர் மாணவர்கள் கடற்கரை ரயில் நிலையத்தில் இறங்கி அரக்கோணம் வரை செல்லக்கூடிய ரயில் ராயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது ராயபுரத்தை சேர்ந்த அதே கல்லூரியின் சீனியர் மாணவர்கள் சுமார் 20பேர் முன்விரோதம் காரணமாக எதிர்தரப்பு மாணவர்களை கற்களை கொண்டு தாக்கியுள்ளனர்.
மீண்டும் தலைதூக்கிய ரூட் தல விவகாரம்.... ரயிலில் மோதிக்கொண்ட மாணவர்கள் - 9மாணவர்கள் கைது
சென்னை: ரூட் தல விவகாரத்தில் மின்சார ரயிலில் மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் ரயில் சென்று கொண்டிருந்தபோது அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய மாணவர்கள் கீழே இறங்கி கற்களால் அவர்களும் தாக்கினர். பின்னர் பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதை அறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களில் 9பேரை மடக்கி பிடித்து எழும்பூர் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏட்டையாவின் விரலை ருசி பார்த்து எஸ்கேப் ஆக முயன்ற திருடன்!
: