சென்னை பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், நேற்றிரவு முன்று பேர் ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் இளவரசன் என்பவர் ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்பாமல் செல்போனை பார்த்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மூவரும் இளவரசனை தாக்கியுள்ளனர்.
பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை - காவல்துறையினர் விசாரணை - காவல்துறையினர் விசாரணை
சென்னை: பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் வந்து தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சத்தம் கேட்டு அருகில் நின்றிருந்த ஊழியர்கள், ஓடி வந்து மூன்று பேரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் ஊழியர்களிடம் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் தனது நண்பர்களுடன் வந்து பெட்ரோல் பங்க் அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டு, சிறைப்பிடித்து வைத்திருந்த தனது நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.
இதையடுத்து ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.