சென்னை:இந்தியாவில் வேலை வாய்ப்பின்மையை குறைப்பதற்காக மத்திய அரசு சார்பில் 'ரோஜ்கர் மேளா' என்ற வேலை வாய்ப்பு முகாம்கள் நாடு முழுவதும் செயல்பட உள்ளன. இந்த முகாம்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் நாடு முழுவதும் தொடங்கிவைத்தார். அப்போது 100 ஆண்டுகளாக உள்ள வேலை வாய்ப்பின்மை பிரச்சனையை, 100 நாட்களில் தீர்க்க இயலாது. இருப்பினும் படிப்படியாக குறைக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது.
100 ஆண்டுகளாக உள்ள பிரச்சனை 100 நாளில் தீர்க்க இயலாது - பிரதமர் - rojkar mela scheme
சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமரின் ரோஜ்கர் மேளா திட்டத்தை தொடங்கி வைத்து பணி ஆணைகளை வழங்கினார்.

"ரோஜ்கர் மேளா திட்டம்"
முதல்கட்டமாத 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட உள்ளது. இன்று ஒரே நாளில் 75,000 பேருக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டன எனத் தெரிவித்தார். பயனடைவார்கள் என்றார். அந்த வகையில் சென்னை ஐ.சி.எப்.பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்கலந்துகொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார். சென்னையில் 250 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:நாட்டின் குடிமக்களின் சேவைக்காக நீங்கள் நியமிக்கப்படுகிறீர்கள் - பிரதமர் மோடி
Last Updated : Oct 23, 2022, 9:21 AM IST