சட்டப்பேரவை கூட்டத்தில், மானிய கோரிக்கை விவாதத்தின்போது திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், குலசேகர பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் அனுமதியை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெற்றுத் தந்தார். அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனக் கூறினார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரிதம்! - rocket launcher work
சென்னை: குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள்
இஸ்ரோ தலைவர் தமிழகத்தைச் சேர்ந்தவர். அவர், குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்று என்னை சந்தித்து கோரிக்கை வைத்தார். தமிழக அரசு நிலம் ஒதுக்கி தந்தால், பிரதமரிடம் பேசி ஏவுதளம் அமைக்க அனுமதி பெற்று தருவதாகவும் தெரிவித்தார். அதனடிப்படையில், நிலம் ஒதுக்கப்பட்டு ஏவுதளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
இதையும் படிங்க: முக்கிய வழக்குகள் மட்டும் விசாரிக்கப்படும்: தலைமை நீதிபதி நாளை அறிவிப்பு?