தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நகை - பணம் கொள்ளை - நகை - பணம் கொள்ளை

சென்னை: அரும்பாக்கத்தில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் 30 சவரன் நகை, பணம் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

Robbery
arumbakkam

By

Published : Nov 1, 2020, 12:11 PM IST

சென்னை அரும்பாக்கம் எம்ஜிஆர் நகர் முதல் தெருவை சேரந்தவர் வசந்த் (32). இவர் இதே பகுதியில் ஃபோட்டோ ஸ்டுடியோவும், இரவு ஹோட்டலும் நடத்தி வருகின்றார். நேற்று (அக்.31) இரவு வசந்த் தனது வீட்டு கதவை சாத்திவிட்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டார்.

வீட்டில் இருந்த இவரது மனைவி கதவை தாழ்ப்பாள் போடாமல் தூங்கச் சென்று விட்டார். இன்று (நவ.01) அதிகாலை இவரது வீட்டுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த 30 சவரன் நகை, 20 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலை வீட்டில் இருந்தவர் பீரோவை திறந்து பாரத்தபோது பீரோவில் இருந்த நகை, பணம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் குறித்து வசந்த் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:குடிபோதையில் விபத்து ஏற்படுத்திய மருத்துவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details