தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாம்பரம் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளை! - Chennai District News

சென்னை: தாம்பரம் அருகே பூட்டிய வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சி.சி.டி.வியில் வெளியான காட்சி
சி.சி.டி.வியில் வெளியான காட்சி

By

Published : Aug 10, 2020, 7:51 PM IST

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பார்வதி நகரில் கடந்த மூன்று வருடங்களாக வாடகை வீட்டில் வசித்து வருபவர் மகேஷ்(31). இவர் தனது வீட்டை கடந்த மாதம் 10ஆம் தேதி பூட்டிவிட்டு குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது மகேஷுக்கு கரோனா தொற்று உறுதியாகி, சிகிச்சை முடிந்து அங்கேயே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று(10.08.20) காலை வீட்டின் உரிமையாளர், மகேஷை தொடர்பு கொண்டு வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதாக கூறியுள்ளார்.

சி.சி.டி.வியில் வெளியான காட்சி
தகவலின் அடிப்படையில் வீட்டிற்கு வந்துள்ளார் மகேஷ். அப்போது வீட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள கேமரா, 500 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

அதன்பின்னர் இதுகுறித்து உடனடியாக பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்குள்ள சி.சி.டி.வியை ஆய்வு செய்தனர். அதில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டினுள் செல்வது தெரிந்தது. எனவே இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்..

இதையும் படிங்க:விபத்தை ஏற்படுத்திவிட்டு ஆள்மாறாட்டம் செய்த ஆயுதப்படை காவலர்!

ABOUT THE AUTHOR

...view details