தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு பேருந்து நடத்துனரை தாக்கிய மாணவர்கள்; போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல்!

ஓட்டேரியில் பேருந்து நடத்துநரை பள்ளி மாணவர்கள் தாக்கியதையடுத்து பேருந்துகளை சாலையில் நிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியர்கள் தொடர்பான காணொலி
போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியர்கள் தொடர்பான காணொலி

By

Published : Dec 18, 2021, 10:25 PM IST

சென்னை: அண்ணா சதுக்கம் முதல் பெரம்பூர்வரை செல்லக்கூடிய அரசுப் பேருந்து இன்று (டிசம்பர் 18)மாலை ஓட்டேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் ஏறியுள்ளனர்.

அவர்கள் பேருந்தின் படிக்கட்டில் நின்று தாளமிட்டபடி பயணிகளுக்கு தொந்தரவளித்ததாக கூறப்படுகிறது. அப்போது மாணவர்களை நடத்துனர் கார்த்திக் கண்டித்ததாக தெரிகிறது. இருப்பினும் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் கோபமடைந்த பள்ளி மாணவர்கள், நடத்துநரை தாக்கியதாக கூறப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியர்கள் தொடர்பான காணொலி

சத்தம் கேட்டு பேருந்தை நிறுத்தி கீழே இறங்கிய ஓட்டுனர் சுப்பிரமணியையும் மாணவர்கள் கல்லால் தாக்கி தப்பியோடியதாக தெரிகிறது. இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சுமார் பத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்து ஊழியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஓட்டேரி காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதன் காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையும் படிங்க:தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

ABOUT THE AUTHOR

...view details