சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, கோயம்பேடு தனியார் பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழா இன்று(பிப்.13) காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இதில், ஆம்னி பேருந்து ஓட்டுநர்களுக்கான மருத்துவ முகாம், ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
இந்த விழாவில் இணைப் போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர் மோகன், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர், பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.