சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என்று பெயர் இருந்தது. தற்போது கிராண்ட் வெஸ்டன் ட்ரங்க் ரோடு என்று பெயர் மாற்றப்பட்டு பலகை வைக்கப்பட்டது. பெரியார் பெயர் நீக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் அரசு தரப்பில், மத்திய அரசின் நெடுஞ்சாலை துறை பதிவேட்டில் கிராண்ட் வெஸ்டன் ட்ரங்க் ரோடு என்ற பெயர் உள்ளது. தமிழ்நாடு அரசின் பதிவேட்டில் மட்டும் பெரியார் ஈ.வெ.ரா சாலை என பெயர் உள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.