தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆலந்தூரில் ஏற்பட்ட திடீர் பள்ளம்! - சாலையில் 10 அடி பள்ளம்

சென்னை: கிண்டி அடுத்த ஆலந்தூர் பகுதியில் உள்ள சாலையில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

road caves  in alandur
road caves in alandur

By

Published : Dec 9, 2020, 5:22 PM IST

சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் ராம் நகரில் இருந்து வானுவாம்பேட்டையை இணைக்கும் பிரதான சாலையில் பரத் மருத்துவமனை அருகே கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் கழிவு நீர் உடைப்பு ஏற்பட்டிருந்த சாலையில் தற்போது திடீரென 10 அடி அகலத்தில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்டு அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஆலந்தூர் மக்கள் மாநகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாநகராட்சி அலுவலர்கள் சாலையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய பள்ளத்தை பார்வையிட்டனர்.

அதன்பின்னர் அந்தச் சாலையில் மக்களே தடுப்புகள், கற்களை வைத்து தடுப்புகள் அமைத்து சாலையை மூடியுள்ளனர்.

திடீர் பள்ளம்

இதன்காரணமாக அவ்வழியாக செல்லகூடிய வாகன ஓட்டிகள் கடும் அவதி அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சாலையில் திடீரென ஏற்பட்டுள்ள பள்ளத்தைக் காண பெரும்பாலான கூட்டம் கூடி வருகிறது.

இதையும் படிங்க: சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே சாலையில் 20 அடி பள்ளம்!

ABOUT THE AUTHOR

...view details