தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2021, 7:43 PM IST

ETV Bharat / state

வா வா ஏரியாக்கு வா... டிடிவி தினகரனை ஆர்.கே. நகருக்கு அழைத்த அதிமுக வேட்பாளர்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை, ஆர்.கே. நகர் தொகுதிக்குள் முடிந்தால் வர சொல்லுங்கள் பார்ப்போம் என அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் சவால் விடுத்துள்ளார்.

அதிமுக வேட்பாளர்
அதிமுக வேட்பாளர்

சென்னை மாவட்டம் ஆர்.கே. நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இன்று தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். தொடர்ந்து எழில் நகர் பகுதியில் சாமி தரிசனம் செய்த பின் தொண்டர்களுடன் மேள தாளங்கள் முழங்க வீடு வீடாக சென்று தனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்கும்படி ஆதரவு திரட்டினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஆர்.எஸ். ராஜேஷ், “ஜெயலலிதா இந்தத் தொகுதிக்கு நிறைவேற்ற நினைத்த திட்டங்களை தொடர்ச்சியாக நிறைவேற்றப் பாடுபடுவேன். திமுகவின் பொய் பரப்புரை 100 சதவிகிதம் மக்களிடம் எடுபடாது. ஆர்.கே. நகர் தொகுதி எதிரொலியாகக் கோவில்பட்டியில் தினகரன் தோல்வி அடைவார்.

டிடிவி தினகரனை ஆர்கே நகருக்கு அழைத்த அதிமுக வேட்பாளர்

இங்குச் செய்யாததை அவர் அங்குச் செய்வாரா. முடிந்தால் தினகரனை ஆர்.கே. நகர் தொகுதிக்குள் வர சொல்லுங்கள் பார்ப்போம். கண்டிப்பாக மக்கள் அவருக்குத் தகுந்த பாடம் கற்பிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details