ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உள்ளிட்ட 32 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.89 கோடியே 60 லட்சம் ரூபாய் சிக்கியது.
பணப்பட்டுவாடா தொடர்பாக வருமானவரித்துறையினர் தாக்கல் செய்த அறிக்கையில், அமைச்சர் விஜயபாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
பணப்பட்டுவாடா தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், விசாரணையை சிபிஐக்கு மாற்றவும் உத்தரவிடக்கோரி திமுக வைரக்கண்ணன், மருது கணேஷ், அருண் நடராஜன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.