தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குரோம்பேட்டையில் அரிசி வியாபாரி வெட்டி கொலை - rice trader murder

சென்னை: குரோம்பேட்டையில் அரிசி வியாபாரியை அடையாளம் தெரியாத இரண்டு பேர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரிசி வியாபாரி கொலை
அரிசி வியாபாரி கொலை

By

Published : Jul 19, 2021, 1:05 AM IST

சென்னை குரோம்பேட்டை சி.எல்.சி.லைன் எட்டாவது தெருவில், அரிசி கடை நடத்தியவர் ஆனந்தராஜ்(46). இவர் தனது கடையை திறப்பதற்காக வீட்டில் இருந்து நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த இரண்டு பேர் கடையின் வாசலிலேயே அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பகுரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தப்பியோடியவர்களை தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details