சென்னை: சென்ட்ரலில் இருந்து பூந்தமல்லி செல்லும் ஈ.வி.ஆர். சாலையில் உள்ல டாக்டர் நாயர் பாயிண்ட் சந்திப்பில், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த தம்பதி இருவரும் தலைக்கவசம் அணிந்து வந்துள்ளனர்.
சென்னையில் ஹெல்மட் அணிந்து சென்ற தம்பதிக்கு வெகுமதி - TN Police
சென்னையில் ஹெல்மெட் அணிந்து சென்ற கூலித் தொழிலாளி தம்பதிக்கு போக்குவரத்து ஆய்வாளர் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த வேப்பேரி போக்குவரத்து ஆய்வாளர் பாண்டி வேலு, அவர்கள் இருவரையும் அழைத்து பாராட்டியுள்ளார். தொடர்ந்து அவர்களின் குடும்ப நிலையை விசாரித்துள்ளார். அதில், அவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருபவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக இருவருக்கும் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார். அதோடு சிக்னலில் நின்ற வாகன ஓட்டிகளுக்கும், இதுபோன்று பைக்கில் செல்லும் இரண்டு நபர்களும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.
இதையும் படிங்க:ஹெல்மெட் அணியாத காவலர்களிடம் முறையாக Fine வசூலிக்கப்படுகிறதா? - அதிர்ச்சித்தகவல்