தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

என்ன செய்வதாக உத்தேசம்?! - நடிகர் விஷாலுக்கு நீதிமன்றம் கேள்வி - court

சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கை எதிர்கொள்வதா? அல்லது வருமானவரி பாக்கியை செலுத்துவதா? என்பதை முடிவு செய்ய நடிகர் விஷாலுக்கு எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால்

By

Published : Aug 28, 2019, 6:32 PM IST

Updated : Aug 28, 2019, 11:24 PM IST

சென்னை வடபழனியில் நடிகர் விஷாலுக்குச் சொந்தமான 'விஷால் பிலிம் பேக்டரி' (VFF) நிறுவனத்தால் பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ். தொகையை கடந்த ஐந்து ஆண்டுகளாக வருமான வரித்துறைக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் செலுத்தவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை பலமுறை நடிகர் விஷாலுக்கு நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் அளிக்காததால், எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட எழும்பூர் நீதிமன்றம், ஆகஸ்ட் 2ஆம் தேதி நடிகர் விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டது. நீதிமன்றம் இரண்டுமுறை சம்மன் அனுப்பியும் விஷால் ஆஜர் ஆகாத நிலையில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் கைது செய்ய நீதிபதி மலர்மதி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன் விசாரணைக்கு வந்தபோது இன்று விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மேலும், 4 கோடி ரூபாய் டி.டி.எஸ். பாக்கி தொடர்பான வழக்கை தொடர்ந்து நடத்துவதா? அல்லது டிடிஎஸ் பாக்கியை செலுத்தி தீர்வு காண்பதா? என்பதை ஆடிட்டருடன் ஆலோசித்து தெரிவிக்க விஷாலுக்கு அறிவுறுத்திய நீதிபதி வழக்கை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Last Updated : Aug 28, 2019, 11:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details