சென்னை, சேலம், மதுரை மற்றும் வேலூர் ஆகிய நான்கு மண்டலங்களில் செயல்பட்டு வந்த பழங்குடியினர் சாதி சான்றிதழ் மெய்த்தன்மை விசாரணை பிரிவுகளில் விசாரணையை துரிதப்படுத்தும் பொருட்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பான அரசாணையை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை வெளியிட்டுள்ளது.
சென்னை மண்டலம்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு (தலைமையிடம் : சென்னை).
சேலம் மண்டலம்: சேலம், நாமக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி (தலைமையிடம் : சேலம்).