சென்னை:தலைமைச் செயலகத்தில் இன்று (நவ.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் சில தினங்களாக பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்புத்தூர், கரூர், பழனி உள்ளிட்ட இடங்களில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த போக்சோ சட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பது குறித்தும், போக்சோ சட்டத்தைப் பொதுமக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.