தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது - வரும் 10ஆம் தேதி கூடுகிறது ஆய்வுக்குழு

சென்னை: தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை
tamil nadu assembly budget session

By

Published : Aug 8, 2021, 2:18 PM IST

Updated : Aug 8, 2021, 3:24 PM IST

சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியமைத்து 100 நாள்கள் நெருங்குகிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில், வரும் 13ஆம் தேதி நிதிநிலை அறிக்கையும், 14ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் காகிதமின்றி தாக்கல் செய்யப்பட உள்ளன.

வேளாண் துறைக்கென நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல்முறை. விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையும் கூட. திமுக தலைமையிலான ஆட்சி பதவியேற்று 100ஆவது நாளில் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவதால், அப்போது முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவல் ஆய்வு குழு கூட்டம்

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து ஆலோசிப்பதற்கான அலுவல் ஆய்வு குழு கூட்டம் நாளை மறுநாள் (ஆகஸ்ட்.10) நடைபெறுகிறது.

தலைமை செயலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமை ஏற்கிறார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், அதிமுக, காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

பட்ஜெட் தாக்கல்

வரும் 13ஆம் தேதி சட்டப்பேரவை அரங்கத்தில் காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார். .

கரோனா தொற்றின் தாக்கம் முழுமையாக குறையாத நிலையில், பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட உள்ளது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 16ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது.

மாறிய வழக்கம்!

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் அலுவல் ஆய்வுக்குழு கூடி, பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்கள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இந்த முறை சட்டப்பேரவை தொடங்குவதற்கு முன்பே அலுவல் ஆய்வுக்குழு நடைப்பெற உள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 10ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

இதில் சட்டப்பேரவை கூட்டம் எத்தனை நாட்கள் நடத்தப்படும் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சபாநாயகர் அப்பாவு வெளியிடுவார்.

இதையும் படிங்க:வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் வரவேற்பு

Last Updated : Aug 8, 2021, 3:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details