கூவம் நதி மறு சீரமைப்பு திட்டத்தின் கீழ் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட கூவம் நதி கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகள் அகற்றப்பட்டுவருகிறது. அப்படி அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்றாக வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் அகற்றம்! - Thiruvenkadu Koovam river
சென்னை:திருவேற்காட்டில் கூவம் நதிக்கரை ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 22 வீடுகளை வருவாய் துறை அலுவலர்கள் காவல் துறையினர் உதவியுடன் அகற்றினர்.
![ஆக்கிரமித்து கட்டப்பட்ட 22 வீடுகள் அகற்றம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4574395-thumbnail-3x2-house.jpg)
அதன்படி கூவம் நதிக் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த மீதமுள்ள 22 வீடுகளை வருவாய் துறை அலுவலர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு காவல் துறையினர் உதவியுடன் அகற்றினர். அப்போது கால அவகாசம் கொடுக்காமல் வீடுகளை இடிப்பதாகவும், இதனால் வீட்டில் உள்ள பொருட்களைகூட எடுக்க முடியாமல் இருப்பதாக கூறி அலுவலர்களிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வருவாய் துறை அலுவலர்கள் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினார்.
இடிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக பெரும்பாக்கம் பகுதியில் அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு அவர்களை அனுப்பி வைத்தனர். இங்குள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் புதிதாக செல்லும் இடத்தில் அங்குள்ள பள்ளியில் சேரவும் அரசு உதவிகள் பெறுவதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அலுலர்கள் தெரிவித்தனர்.