தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கையகப்படுத்தப்படும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

தமிழ்நாட்டில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் கையகப்படுத்தப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

revenue-minister-kkssrr-says-occupied-lands-will-will-be-acquired-soon
ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கையகப்படுத்தபடும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

By

Published : Aug 5, 2021, 4:49 PM IST

சென்னை:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் குறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் சென்னை எழிலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தின் நிறைவாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

சென்னை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பில் உள்ள பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை மனுக்கள் சரி செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்யபட்டது.

ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை

சென்னை, அதனை சுற்றியுள்ள மாவட்டடங்களில் பட்டா வழங்குதல் தொடர்பான மனுக்கள் அதிகம் வந்துள்ளன. சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள நான்கு மாவட்டங்களில் பட்டா முறைகேடுகள் அதிகம் உள்ளன. அவை அனைத்தையும் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கையகப்படுத்தப்படும்

பட்டா எண் வழங்குதலில் ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் மூலம் பிரச்சினையை தீர்க்க உத்தரவிட்டுளோம். அரசு நிலங்களில் தனியார் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் அதனை அகற்ற உத்தரவிட்டுள்ளோம். பேரிடர் காலங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் வருவாய் துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கூவம் ஏரிக்கரை பகுதிகளில் உள்ள ஆகிரமிப்புகள் அகற்றப்பட்டு அங்கு குடியிருந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறையுடன் இணைந்து அகற்றும் பணியில் விரைந்து ஈடுபட உள்ளோம்.

ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு கையகப்படுத்தும்

சென்னை, அதனை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் நிலத்தின் மதிப்பு அதிகம் உள்ளது. அரசு அலுவலகங்கள் கட்டுவதற்கு அரசுக்கு நிலங்கள் தேவை அதிகம் உள்ளது.

எனவே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பாதுகாக்கப்படும். ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஆக்கிரமிப்பு பட்டியல் எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர் யார் என கண்டறிந்து அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து 99 விழுக்காடு இடங்கள் அரசால் கையகப்படுத்தப்படும்.

ஆக்கிரமிப்புகள் அனைத்தும் கையகப்படுத்தப்படும்

அரசின் வளர்ச்சிப் பணிக்கு அதிக நிலங்கள் தேவைப்படுவதால் ஆக்கிரமிப்பு இடங்கள் கையகப்படுத்தப்படும். பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளதால், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள கூவம் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் கனவு திட்டம். அவற்றை கண்டிப்பாக செயல்படுத்துவோம். தஞ்சை சாஸ்திரா பல்கலைக்கழகம் நில ஆக்கிரமிப்பு குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஆய்வறிக்கை பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார்.

இதையும் படிங்க:ரூ.3 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: வருவாய்த் துறை அதிரடி

ABOUT THE AUTHOR

...view details