தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இழப்பீடு தொகை 2 மாதத்திற்குள் கிடைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் - kkssr ramachandran

வறட்சி காலத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு இரண்டு மாதத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்

By

Published : Aug 31, 2021, 11:10 PM IST

சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆக.31) வருவாய் துறை, தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதிலுரை வழங்கி பேசினார்.

அப்போது, " பட்டா வழங்குவது, மாற்றம் செய்வது போன்ற பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நில அளவையர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.

ஆக்கிரமிப்பில் சென்னை முதலிடம்

வறட்சி காலத்தில் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க ஆறு முதல் ஏழு மாதம் ஆகிறது. அது இரண்டு மாதத்திற்குள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கிரமிப்பில் சென்னை முதலிடம் வகிக்கிறது.

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்தில் 85 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கனிமவளங்கள் கடத்தலைத் தடுக்க அரசு நடவடக்கை எடுக்கும் - அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details