நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் உதயகுமார் பேசுகையில்,
'ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடுமையான தண்டனை' - உதயகுமார் எச்சரிக்கை - TN Minister RB udhyakumar
சென்னை: "தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ல் திருத்தம் செய்யப்பட்டு, அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு எதிராக கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்படும்" என்று, அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
"தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905-ல் அரசாங்க நிலங்களை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டவுடன் அவற்றை அகற்றவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரசு நிலங்களில் ஏற்படும் ஆக்கிரமிப்பால் உண்டாகும் பிரச்னைகளை மனதில் கொண்டு இச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அரசு முடிவுசெய்து பொருத்தமான திருத்தங்களைப் பரிந்துரைக்க, ஒரு செயலர் நிலைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திற்கான திருத்தங்கள் நடப்பு ஆண்டிலேயே இயற்றப்படவுள்ளது. அந்த திருத்தச் சட்டத்தில் அரசு நிலங்களில் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிகள் கொண்டுவரப்பட உள்ளன. நில ஆக்கிரமிப்பு திருத்தச் சட்டத்தில் தற்போது உள்ள மேல்முறையீடு, சீராய்வு முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு எளியதாகவும், விரைந்தும் தீர்வு காணும் வகையில் புதிய முறைகள் கொண்டுவரப்படும்" என்றார்.