நரேன், இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். AAAR ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ’ப்ரொடக்ஷன் No.1’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டுள்ளது. டிராமா திரில்லர் வகை படமாக உருவாகும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் ஸாக் ஹாரிஸ் இயக்குகிறார்.
இது குறித்து AAAR ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கூறியதாவது. "தமிழ்த்திரை உலகில் இது எங்களின் முதல் திரைப்படம். தொடர்ந்து கனமான கதைகள் கொண்ட, ரசிகர்கள் விரும்பும் தரமான படங்களை நாங்கள் தயாரிப்போம். குறிப்பாக புத்தம்புது ஐடியாக்களுடன் போராடும் புதிய இளம் திறமையாளர்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். இயக்குநர் ஸாக் ஹாரிஸ் லண்டனில் மிக உயர்ந்த கல்லூரியில், திரைப்படப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் தமிழ் சினிமாவில் பல்வேறு திறன்மிக்க கலைஞர்களுடன் வேலை செய்துள்ளார். இத்திரைப்படத்தை மிகத் தரமான படைப்பாக உருவாக்குவார் எனும் நம்பிக்கை உள்ளது. தமிழ் சினிமாவில் தனித்திறமையால் பாராட்டு பெற்றிருக்கும் கதிர், ஆனந்தி ஆகியோர் எங்கள் படத்தில் இணைந்தது பெரும் மகிழ்ச்சி. ஏற்கனவே அவர்கள் தமிழ் சினிமாவில் தரமான படங்களில், வலுவான கதாப்பாத்திரங்களில் நடித்து, பெரிய அளவில் பாராட்டு பெற்றுள்ளார்கள். மேலும், அனைவராலும் கொண்டாடப்பட்ட பரியேறும் பெருமாள் படத்தில் கதிர், ஆனந்தி இருவருரின் கெமிஸ்ட்ரி மிக அற்புதமாக இருந்தது. கதிர் இப்படத்திற்கு பிறகு மிகப்பெரும் உயரத்திற்கு செல்வார்.தமிழின் பிரபல கலைஞர்கள், நடிகர்கள் ஆகியோருடன் இப்படத்திற்காக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தில் பணியாற்ற உள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
2021ஆம் ஆண்டு தொடக்கத்தில் படத்தைத் தொடங்கி, 2021 கோடை காலத்தில் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இப்படம் சென்னை, கேரளா பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. இப்படத்தினை AAAR ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் லவன் பிரகாசன்-குசன் பிரகாசன் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.