சென்னைராயப்பேட்டை கங்கைஅம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமி காந்தன் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர். இவரது மனைவி பகவதி. இவர்களுக்கு இரு மகள்கள். நேற்றிரவு (ஏப்ரல் 14) நான்கு பேரும் மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகில் ஷேர் ஆட்டோவில் வந்து இறங்கினர். பிறகு ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள பிரபு நகலகம் எதிரில் நடந்து வந்தபோது பின்னால் பைக்கில் வந்த மூன்று பேர் பகவதியின் கழுத்திலிருந்த இரண்டரை சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு ஓடினர்.
விசாரணையில் அவர், மாட்டாங்குப்பத்தைச் சேர்ந்த பூபாலன் என்பது தெரிந்தது. அந்த நபர்
படுகாயத்துடன் மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தப்பியோடிய இரண்டு பேரையும் மயிலாப்பூர் காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.