சென்னை: இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் 1944 ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜிவ் காந்தி, அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அவரது தாயார் இந்திரா காந்தியின் அரசியல் வாரிசாக வளர்க்கப்பட்டு வந்த இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமானார்.
அதன் பின்னர், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். அதன் பின் 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தி நின்று வென்ற தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தனது தந்தையின் தொகுதியில் ராகுல் காந்தி 2004 முதல் 2019 வரை போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் சோனியா ராகுல் பிரியங்கா ராஜிவ் கொலையும் பின்னணியும்!
இதனிடையே, 1984 ஆம் ஆண்டு அவரது தாயாரும் அப்போதைய பிரதமருமான இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து ராஜிவ் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் அக்டோபர் 1984 இல் பதவியேற்ற போது 40 வயதில் இந்தியாவின் இளம் பிரதமரானார். அன்று முதல் டிசம்பர் 2, 1989 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 'எனது தந்தை எனக்குக் கொடுத்த பரிசு' - கடைசி புகைப்படத்தை வெளியிட்ட பிரியங்கா காந்தி
ஸ்ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று நடந்த தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தின் போது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இதில், பாதுகாப்பு பணியில் இருந்த 18 காவல்துறையினர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 45 பேர் படுகாயம் அடைந்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி ராஜிவ் காந்தி கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட எழுவர் யார்?
தமிழகத்தையே உலுக்கிய இந்த குண்டு வெடிப்பு வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். உச்ச நீதிமன்ற மேல் முறையீட்டிலும் இவர்கள் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் கருணை அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடம் இந்த நிலையில் 31 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனை பல்வேறு சட்டபோராட்டங்களுக்கு பிறகு (மே 18)
அரசியலமைப்பு சட்டத்தின் 142ஆவது பிரிவின்படி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.
பேரறிவாளன் கைது முதல் விடுதலை வரை... 31 ஆண்டுகள் நடந்தது என்ன? - விரிவான தகவல்
மாநில அரசுக்கு மட்டுமே அதிகாரம்:இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு முன்வைத்த வாதம், "தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசு தலைவருக்கு கிடையாது. அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறது. அதுவே குழப்பங்களுக்கு காரணம். ஆளுநர் தனது கடமையை முறையாக செய்யவில்லை" என குற்றஞ்சாட்டியது.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு அதன் அடிப்படையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், நீதிமன்றத்திற்கான சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி அவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பேரறிவாளன் விடுதலை அநீதி - குண்டு வெடிப்பில் காயம் அடைந்த போலீஸ் அதிகாரி அனுசுயா கொந்தளிப்பு! பேரறிவாளன் விடுதலை - திகில் கிளப்பும் திருச்சி வேலுச்சாமி
தன்னை சுற்றி மரண ஓலம்:இந்தநிலையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி குண்டுவெடிப்பின் போது படுகாயமடைந்த ஓய்வுபெற்ற பெண் போலீஸ் அதிகாரி அனுசுயா டெய்சி ஈடிவி பாரத்திற்கு பிரேத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த போது பாதுகாப்பு பணியில் இருந்ததாகவும், அப்போது திடீரென குண்டு வெடித்ததில் தூக்கிவீசப்பட்டு, கைகள் துண்டாகி ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், தன்னை சுற்றி மரண ஓலம் கேட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடம் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் மற்றவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - ஸ்டாலின்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு அநீதி: இந்த சம்பவத்தில், காவல்துறையினர், அப்பாவி பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். மேலும் பலர் ஊனமடைந்ததாக தெரிவித்துள்ளார். குற்றவாளியான பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியிருப்பது அநீதி. குற்றவாளிக்குப் பரிதாபம் பார்க்கும் அரசும், உச்ச நீதிமன்றமும் ஏன் உயிரிழந்த, படுகாயமடைந்த அப்பாவி மக்களுக்கு பரிதாபம் பார்க்கவில்லை என கூறினார்.
டெல்லி வீர்பூமியில் அமைந்துள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் ஒரு தாயின் வெற்றி - பேரறிவாளனை மீண்டும் ஈன்ற அற்புதம்மாள்!
குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட முன்னுதாரணமான தீர்ப்பு: ஈவு இரக்கமின்றி அத்தனை உயிர்களை கொலை செய்த குற்றவாளிக்கு அளிக்கப்பட்ட இந்த தீர்ப்பு முன்னுதாரணமான தீர்ப்பு எனவும், இந்த தீர்ப்பை சுட்டிக்காட்டி பல வழக்குகள் வாதாடப்படும் என கூறினார். இந்த தீர்ப்பை முழுவதுமாக வெறுப்பதாக ஆவேசமாக கூறினார். தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்துவிட்டோம் என மார்தட்டி கொள்கிறார்களே தவிர, அப்பாவி மக்களை பற்றி கவலைப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடத்தில் சோனியா பேரறிவாளன் விடுதலையால், நீட் வழக்குக்கும் வழி பிறக்குமா - சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?
பணம் எங்கே இருந்து வந்தது? : தீவிரவாதி பேரறிவாளனை கட்டி தழுவி முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுகிறார். அவர் என்ன சுதந்திர போராட்ட வீரரா என கேள்வி எழுப்பினார். மேலும் இந்த தீர்ப்பை பொதுமக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என கூறினார். மேலும் 31 வருடம் பேரறிவாளனை விடுதலை செய்ய போராடியதற்குப் பணம் எங்கே இருந்து வந்தது? என கேள்வி எழுப்பினார்.
விடுதலையாகி வெளியே வந்தாலும், பிரதமர் ராஜிவ் காந்தி கொலையாளி என பொதுமக்கள் கூறுவார்கள். அது தான் அவர்களுக்குக் கொடுத்த தண்டனை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் எனது ரத்தம் கலந்துள்ளது: ராகுல் காந்தி நெகிழ்ச்சி