தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை மின் நிலைய பராமரிப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள் - பறிபோகும் இளைஞர்களின் வேலை! - Privatisation in Electricity Board

சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 110 கேவி துணை மின் நிலையங்களை பராமரிக்கும் பணியில் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளதால், இளைஞர்களின் வேலைவாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

retired-officials-to-be-appointed-for-substation-maintenance-work-in-tneb
retired-officials-to-be-appointed-for-substation-maintenance-work-in-tneb

By

Published : Oct 9, 2020, 8:18 PM IST

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. மின்சாரம் உற்பத்தி நிலையங்களிலிருந்து, துணை மின் நிலையங்களுக்கு மின் கம்பிகள் மூலம் மின்சாரத்தை கடத்தி, அங்கிருந்து தொழிற்சாலைகள், வீடுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

மின் விநியோகம் செய்வதில் துணை மின் நிலையங்களுக்கு பெரும் பங்கு உள்ளது. தமிழ்நாட்டில் 765 கேவி, 400 கேவி, 230 கேவி, 110 கேவி, 66 கேவி என்ற அளவு திறன் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 110 கேவி துணை மின் நிலையங்கள் 850க்கும் மேல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

தலைமை பொறியாளர் அனுப்பிய கடிதம்

இந்த துணை மின் நிலையங்களை பராமரிக்க இளநிலை உதவியாளர் பதவிகளில் பொறியியல் படிப்பை முடித்தவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். இந்நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களை தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை பொறியாளர் (பணியாளர்) அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், '' 110 கேவி அளவு திறன் கொண்ட துணை மின் நிலையங்களில் காலியாகவுள்ள உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர்களை 50 சதவிகிதம் நியமனம் செய்து கொள்ளலாம்.

தலைமை பொறியாளர் அனுப்பிய கடிதம்

துணை மின் நிலையங்களை இயக்குவதற்காக, ஏற்கனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களை மட்டுமே 50 சதவீதம் நியமனம் செய்ய வேண்டும். மேலும் இவர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு 750 ரூபாய் வீதம் 30 நாள்களுக்கு பணி வழங்கலாம். தவிர்க்க முடியாத காரணங்களால் ஷிப்டில் இருந்து மாற்றி விடுவதற்கு வேறு நபர் வராவிட்டால் இவரே தொடரவேண்டும்.

தலைமை பொறியாளர் அனுப்பிய கடிதம்

துணை மின் நிலையங்களை இயக்கும்போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால், அவர்கள் நஷ்ட ஈடு கோர முடியாது. அவர்களை எப்போது வேண்டும் என்றாலும் பணியிலிருந்து நீக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து தலைமை பொறியாளரிடம் (பணியாளர் நலன்) கேட்டபோது, ''உதவி செயற்பொறியாளர் பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்யும் வரை, தற்காலிக ஏற்பாடாக தான் இதனை செய்துள்ளோம்'' என்றார்.

துணை மின் நிலைய பராமரிப்பு பணியில் ஓய்வு பெற்ற அலுவலர்கள்

இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் கூறுகையில், ''துணை மின் நிலையங்களில் ஓய்வு பெற்றவர்களை நியமனம் செய்வதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பறிக்கப்படும். எனவே வேலை வாய்ப்பை உருவாக்கி இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும்'' என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மின்சார வாரியத்தில் முதல்முறையாக புகுத்தப்படும் தனியார்மயம்...!

ABOUT THE AUTHOR

...view details