தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநகராட்சியில் 39 ஆண்டுகளாக பணியாற்றிய அலுவலக உதவியாளர் ஓய்வு - உதவியாளர் ஓய்வு

சென்னை மாநகராட்சியில் 39 ஆண்டுகளாக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த, மது ஓய்வு பெற்றார்.

மாநகராட்சி உதவியாளர் ஓய்வு
மாநகராட்சி உதவியாளர் ஓய்வு

By

Published : Mar 1, 2023, 6:04 PM IST

சென்னை: மாநகராட்சி அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் மது. 1984ம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர், நேற்றுடன் (பிப்.28) ஓய்வு பெற்றார். மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில், அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேயர் பிரியா, ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் மது-வுக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

தந்தை மறைவுக்கு பிறகு, மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்ற மதுவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 1984ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். பின்னர் மாவட்ட வடக்கு, தெற்கு மண்டல உதவி ஆணையர்களிடம் உதவியாளராக பணியாற்றியுள்ளார். 1988ல், பேசின் பாலத்தில் உள்ள மண்டலம் 5ம் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து இயந்திர துறைக்கு மாற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, 2006ம் ஆண்டு முதல் ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் உதவியாளராக பணியாற்றினார். இதுவரை 8 ஆணையர்களிடம் உதவியாளராக இருந்துள்ள மது, முதலமைச்சர் ஸ்டாலின் மேயராக இருந்த போது அவருக்கும் உதவியாளராக இருந்துள்ளார். அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்த மது, அதன்பின்னர் ஜமேதாராக பதவி உயர்வு பெற்றார். ஆளுநர், முதலமைச்சர், மேயர் ஆகியோரின் உதவியாளர்களுக்கு மட்டுமே ஜமேதார் என்ற பட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை: சி.விஜயபாஸ்கர் தொடர்பான கருத்துக்கு எதிரான தடையை நீக்க மறுப்பு!

ABOUT THE AUTHOR

...view details