சென்னை: நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்தக் குழுவினர் பல்வேறு தரவுகளைப் பெற்றும் பொதுமக்களிடமிருந்து கருத்துகளை வாங்கிய பின்னர், அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி இறுதிசெய்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருந்தது. இதனால் குழு தனது அறிக்கையைத் தயார் செய்திருந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பிற்குக் காத்திருந்தனர்.
நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூலை 13) தள்ளுபடிசெய்தது.
இந்த நிலையில் நீட் தேர்வினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த அறிக்கையைக் குழுவில் தலைவர் உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த அறிக்கை குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திற்கு, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே. ராஜன் சிறப்புப் பேட்டியளித்தார்.
அதில், “தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வுசெய்து அறிக்கை அளிப்பதற்காக அரசு குழு அமைப்பது. எங்கள் பணிகளை ஜூன் 10ஆம் தேதி தொடங்கினோம். அரசு கூறியதுபோல் ஒரு மாதத்திற்குள் அறிக்கைத் தயார் செய்துவிட்டோம்.