தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிச்சயம் அரசியல் களம் காண்போம் - சகாயம் - சென்னை மாவட்டச் செய்திகள்

சென்னை: ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் வாருங்கள் என்ற தலைப்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர் சகாயம் தனது அரசியலுக்கான வருகையை அறிவித்தார்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் சகாயம்
Retired IAS Officer Sagayam

By

Published : Feb 22, 2021, 8:14 AM IST

Updated : Feb 22, 2021, 8:56 AM IST

ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் வாருங்கள் என்ற தலைப்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விருப்ப ஓய்வுபெற்ற சகாயம் கலந்துகொண்டார். இதில் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்தக் கூட்டத்தில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் பேசிய சகாயம், "ஊழல் என்கிற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும். சுடுகாட்டில் படுப்பதற்கு பயம் இல்லை. ஆனால் சுதந்திர இந்தியாவில் நடப்பதற்குதான் பயமாக உள்ளது. குறைவாகப் பேசி நிறைய செயல்பட வேண்டும். அதனால் நான் இன்று குறைவாகத்தான் பேச உள்ளேன்.

நான் மட்டும் ஊழலை ஒழிப்பது சாத்தியம் இல்லை. எல்லா இளைஞர்களும் ஒன்றாக வாருங்கள் ஊழலை ஒழிக்கலாம். அரசியல் ஆசை ஒரு காலமும் எனக்கு இருந்தது இல்லை. எனக்கு அரசியல் கோபம் இருந்தது உண்டு, ஆனால் அரசியல் ஆசை இல்லை.

நான் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை. பதவி என்னை ஈர்க்கவில்லை. நான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றுதான் எண்ணினேன். ரஜினியின் முதலமைச்சர் வேட்பாளர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. நான் யாரிடமும் பேசியதில்லை, எந்த நடிகரிடமும் பேசியது இல்லை.

ஆவிகளைக் காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள் அதிகம் உள்ளனர் என எனக்குத் தெரியும். அரசியல் தாகத்தோடு நான் பேசியது கிடையாது. அங்கே சந்தித்துவிட்டார், இங்கே சந்தித்துவிட்டார் எனச் சொல்கின்றனர். ஆனால் அந்த நடிகர்களின் வீடுகள் எங்கே உள்ளன என்றுகூட எனக்குத் தெரியாது.

தேர்தல் களம் என்பது வேறு. பல நிறுவனங்களிடம் நாம் நிதி வாங்க வேண்டி இருக்கும் அது நமது நேர்மைக்குப் பாதகம் விளைவிக்கும். ரத்த துடிப்பு உள்ள இளைஞர்களே வாருங்கள் புதிய தமிழகத்தைப் படைக்கலாம்.

அரசியல் களம் காண்போம் என்பதை ஆமோதிக்கிறேன்; அரசியல் களம் அவ்வளவு எளிதானது அல்ல. ஊழலுக்கு எதிராக லட்சியத்துடன் தொடர்ந்து போராடுவோம். என்னுடைய கோரிக்கை, நீங்கள் அரசியல் களத்தில் பயணிக்கும்வரை காமராஜர், கக்கன்போல முழு எளிமையானவராக நேர்மையாளராக இருக்க வேண்டும்.

இறுதிவரை நீங்கள் நேர்மையாளராக இருந்தால் எனக்குச் சில கோரிக்கைகள் உள்ளன. உங்களோடு பயணிக்க நான் ஆசைப்படுகிறேன். தற்போது ஊழல் நிர்வாகம் வலிமை பெற்றுள்ளது. ஊழல்வாதிகள் வலிமை பெற்றுள்ளனர்.

லட்சியம்தான் முக்கியம், அதனால் அதிகம் என்னை துதிபாட வேண்டாம். நிச்சயமாக அரசியல் களம் காண்போம். சாதி மதம் உடைத்து எறியகூட நேர்மையானதாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "ஊழலை ஒழிக்க அரசியல் களம்" - சென்னையில் சகாயம் பேச்சு

Last Updated : Feb 22, 2021, 8:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details