சென்னை:நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் 4ஆவது கூட்டம் இன்று (ஜூலை 08) சென்னை கீழ்ப்பாக்கத்திலுள்ள மருத்துவக்கல்வி இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்வு குறித்த ஆய்வு:
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவத்துறை சிறப்புச் செயலாளர் செந்தில் குமார், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் காகர்லா உஷா, சட்டத்துறைச் செயலாளர் கோபிநாத், மருத்துவர் ரவீந்திரநாத், ஜவஹர் நேசன், மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் வசந்தாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் குழுவிற்கு வரப்பட்ட கடிதங்களின் அடிப்படையிலும், பல்வேறு தரவுகளின் அடிப்படையிலும் ஆய்வு செய்யப்பட்டு இறுதி அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், 'நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்யும் பணிகள் 90 விழுக்காடு முடிவடைந்துவிட்டன. மிக விரைவில் மீதமுள்ள பணிகளும் முடிவடையும்.