சென்னையை அடுத்த கோவளத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை அவரது வீட்டு வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறிய சிறுமியின் உறவு பெண், மிரட்டிபாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் விசாரணை நடத்திய வண்ணாரப்பேட்டை மகளிர் போலீசார், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் சகிதாபானு அவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தவர் மற்றும் இடைத்தரகர்கள் என 12 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
இடைத்தரகர்கள் மூலம் வண்ணராப்பேட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜேந்திரன் என்பவர் சிறுமியை தனது அலுவலகத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய, அவரது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தி என்பவரையும் வரவழைத்து இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி பாஜக பிரமுகரும், காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சில அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஒருவரும், மருத்துவர் ஒருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தததாக தகவல் வெளியாகியுள்ளது.