இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு 15.4.2020 அன்று வெளியிட்ட ஆணையின்படி, 20.4.2020க்கு பிறகு எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பதை பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வரும்வரை ஊரடங்கு உத்தரவு தொடரும்: தமிழ்நாடு அரசு! - Latest Corona Virus News
சென்னை: மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை மத்திய அரசு அறிவித்த தளர்வுகள் எதுவும் நடைமுறைக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென மாநில அரசு ஒரு வல்லுநர் குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு, கூட்டம் நடத்தி முதல்கட்ட ஆலோசனைகளை நடத்தும். பின்னர், அது தொடர்பாக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுச் செல்லும். அதையடுத்து ஆலோசனைகளை ஆராய்ந்து முதலமைச்சர் பழனிசாமி முடிவெடுப்பார். எனவே, இது குறித்து தமிழ்நாடு அரசின் ஆணைகள் வெளியிடும் வரை, தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்'' என்று அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஒரே மருத்துவமனையில் 31 செவிலியர், 5 மருத்துவர்களுக்கு கரோனா?