சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொண்டு வரும் கரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல சிறப்புக் குழு அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டம் கரோனா தடுப்பு சிறப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அம்மா மாளிகையில் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "சென்னை மாநகராட்சியில் கரோனா பாதிப்பாளர்கள் 4 ஆயிரத்து 371 நபர்கள் வசித்த 690 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. பொது சுகாதாரத் துறையின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 628 கட்டுப்பட்ட பகுதிகளில் சுமார் 4 லட்சத்து 25ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர்.