தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் தூக்க மருந்து விற்க கட்டுப்பாடு

மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தூக்க மருந்து விற்க கட்டுப்பாடு
தமிழ்நாட்டில் தூக்க மருந்து விற்க கட்டுப்பாடு

By

Published : Jan 19, 2023, 6:52 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் மருந்துகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரை இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று மருந்தகங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மருந்து கட்டுப்பாடு இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனநோய் மற்றும் தூக்க மருந்துகள் தவறான பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சில்லறை மற்றும் மொத்த மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தினர்.

அதில் சென்னை, திருவான்மியூர் கடற்கரை சாலையில் உள்ள ஒரு மருந்து கடையில் வலி நிவாரணி மருந்துகள் பெருமளவில் வாங்கி, உரிய விற்பனை ரசீதுகள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. புலனாய்வு பிரிவு, மருந்துகள் ஆய்வாளரால் அந்த மருந்துக்கடைக்கு வருவாய் ஆய்வாளர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் அக்கடையின் மீது சட்ட நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மருந்துக் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சில்லறை மருந்து விற்பனை நிறுவனங்கள், மனநோய் மற்றும் தூக்க மருந்துகளின் தவறான பயன்பாட்டைத் தடுக்க மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை ரசீதுகளுடன் விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன - மாநகராட்சி ஆணையர்

ABOUT THE AUTHOR

...view details